×

கடலூர் முதுநகரில் நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது

 

கடலூர், ஜூன் 3: கடலூர் முதுநகர் அருகே உள்ள செல்லங்குப்பம் வேத விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராமு (43). மீனவரான இவர் கடந்த 29ம் தேதி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான அய்யம்பேட்டையில் உள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டிற்காக சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு 30ம் தேதி அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதன் பின்னர் மாடியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ‌40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மூர்த்தி, கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில், கீழ் புவனகிரியை சேர்ந்த சுரேஷ் (38), கருங்கூழியை சேர்ந்த ஆனந்தராஜ் (22), புளியங்குடியை சேர்ந்த கலையரசன் (18) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது ராமு வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அதன் பேரில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 ¼ பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கடலூர் முதுநகரில் நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Ramu ,Chellanguppam Veda Vinayagar Koil Street ,Muthunagar, Cuddalore ,Kulatheiva ,Ayyambatta ,
× RELATED குவைத் அடுக்குமாடி குடியிருப்பில்...