×

தர்மபுரி நான்குரோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி, நவ.29: தர்மபுரி நான்கு ரோடு அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று மனு கொடுத்தனர். தர்மபுரி நான்கு ரோடு அருகே மாதேஸ்வரா தியேட்டர் பின்புறம் குடிசை காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:  குடிசை காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில், ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 மாதத்திற்கு முன், குடிசை காலனியில் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த கடைக்கு வருபவர்கள் கடைகள் முன் ரோட்டிலேயே மது அருந்துகின்றனர். இதை தட்டி கேட்பவர்களை ஆபாச வார்த்தையில் திட்டுகின்றனர். மேலும், இவ்வழியாக நடந்து போகும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளை ஆபாசமாக பேசுகின்றனர். இந்நிலையில், எங்கள் பகுதியில் மேலும் புதிய டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, எங்கள் பகுதியில் உள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் நலன் கருதி, புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : protest ,opening ,Dharmapuri ,Tashkm Shop ,
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு