×

காரிமங்கலம் அருகே விபத்து டிராக்டர் மீது கார் மோதி ஐயப்ப பக்தர்கள் 6 பேர் காயம்

காரிமங்கலம், நவ.28: காரிமங்கலம் அருகே டிராக்டர் மீது, கார் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா(58). இவர், தனது உறவினர்களான ரகு(32), பாபு(40), மகேஷ்(23), அர்ஷா(12), கவுதம்(10) ஆகியோருடன், கடந்த 25ம் தேதி ஒரு காரில் சபரிமலைக்கு சென்றார். அங்கு, சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு அதே காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் காரை திருப்ப முயன்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சந்திரப்பா, ரகு ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 4 பேரும் லேசான காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காரிமங்கலம் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car crash ,accident tractor ,Calimangalam ,devotees ,
× RELATED கடலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி...