×

குடியிருப்பு பகுதியில் தேங்கும் சாக்கடையை அகற்ற நிரந்தர தீர்வு

 

கிருஷ்ணகிரி, மே 26: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடையை அகற்ற நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆனந்த நகரை ஒட்டி, கலால் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் இல்லை.

சாலை வசதியும் இல்லை. இங்குள்ள பல பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. கழிவுநீர் தேங்கி வீடுகள் அருகிலேயே குட்டை போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று அபாயமும் உள்ளது. மேலும், விஷ ஜந்துகளும் அதிகளவில் அப்பகுதியில் சுற்றித்திரிகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து கடந்த 20ம் தேதி, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி பிடிஓ சரவணன் கூறுகையில், ‘ஆனந்த் நகரை ஒட்டியுள்ள கலால் காவல் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையான சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் வசதி ஆகிய பணிகள் 2024-25ம் நிதியாண்டில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன், செய்து முடிக்கப்பட்டு, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,’ என்றார்.

 

The post குடியிருப்பு பகுதியில் தேங்கும் சாக்கடையை அகற்ற நிரந்தர தீர்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Pettalapalli ,Pettalapalli panchayat ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்