×

சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

 

போச்சம்பள்ளி, மே 24: கிருஷ்ணகிரியில் இருந்து பாண்டிசேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக தார் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பாண்டிசேரி, திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், ஊத்தங்கரை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து பஸ்களும் மத்தூர் வந்து தான் செல்ல வேண்டும்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், போக்குவரத்துக்கு போதிய வசதியில்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை, மத்தூரில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலை, கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாலம் உறுதியாக இருக்கவும், மண் மேடுகள் மறைய சிமெண்ட் கற்கள் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால், அந்த கற்கள் சில பகுதிகளில் சரிந்து விழுந்தது. கற்கள் மழையால் அப்படியே தங்கி, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்து, இதனை சீரமைக்க வேண்டும் என கடந்த 22ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Krishnagiri ,Pondicherry ,Bengaluru ,Tiruvannamalai ,Melmaruvathur ,Uthangarai ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி மாடு பலி