×

கள்ளக்காதலியிடம் இருந்து பிரித்ததால் கட்டிட மேஸ்திரி தற்கொலை

தர்மபுரி, நவ.28: அரூர் அருகே கள்ளக்காதலியிடம் இருந்து பிரித்து வைத்ததால், கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் ஆட்டையானூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (33). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி முருகம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த திருமணமான வேறொரு பெண்ணுடன் தம்பிதுரைக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஊரைவிட்டு ஓடினர். இந்நிலையில், உறவினர்கள் அவர்களை பிடித்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் பிரித்து வைத்தனர். தம்பிதுரைக்கு உறவினர்கள் தொடர்ந்து அறிவுரை கூறி வந்தனர். இதனால் மனமுடைந்த தம்பிதுரை,வீட்டிற்கு அருகே உள்ள மாட்டு கொட்டகையில், நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தம்பிதுரை உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,building maestro ,Kallakadali ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...