×

கோர்ட் உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

ஈரோடு, நவ. 28:  கோர்ட் தடை உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூந்துறை சேமூர், பெரலிமேடு  பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க கடந்த சில  மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கடையை அமைப்பதில் டாஸ்மாக் நிர்வாகம்  தீவிரம் காட்டியதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கிராம மக்கள்,  டாஸ்மாக் கடை திறக்க தடை உத்தரவு பெற்றனர். ஆனால் தடை உத்தரவு  வழங்கப்பட்ட இடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே மீண்டும் கடை திறக்க  டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி  உள்ளனர்.

 தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது மாணவ, மாணவிகள்  பள்ளி, கல்லுாரிக்கு சென்று வரக்கூடிய பஸ் ஸ்டாப் பகுதி என்பதால், அவர்கள்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியியில் டாஸ்மாக் கடை திறக்க  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்  மனு அளித்துள்ளனர்.

Tags : shop ,Taskmill ,
× RELATED லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி