×

பாலக்கோடு அருகே திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு, நவ.27: பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வெள்ளிசந்தையில், திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் வரவேற்றார். நாடாளுமன்ற பொறுப்பாளர்களான பார்.இளங்கோவன், தமிழ்மணி ஆகியோர் ேபசினர். கூட்டத்தில், ஒவ்வொரு பூத்திற்கும் 15 ஆண் உறுப்பினர்கள், 5 பெண் உறுப்பினர்கள் என 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திமுக செய்த சாதனைகளை விளக்கி, வாக்குகள் சேகரிக்க ேவண்டும் என அறிவுறுத்தினர். இதில், மாவட்ட அவை தலைவர் மாதையன், துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொருளாளர் தர்மச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் எம்எல்எ வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், குட்டி கவுண்டர், குமரவேல், அணிகளின் அமைப்பாளர்கள் முருகன், ரவி, அடிலம் அன்பழகன் மற்றும் சந்திரசேகர், தனகோட்டி, குமார், ராஜபார்ட், டாக்டர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,activists ,consultation meeting ,Balakode ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்