×

உலக சுற்றுச்சூழல் தினம்

 

ராமேஸ்வரம், ஜூன் 7: ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தீர்த்தக் குளத்தை சுத்தம் செய்து உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ராமேஸ்வரம் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் தங்கச்சிமடத்தில் உள்ள மங்கள தீர்த்தத்தில் உள்ளே இறங்கி தேங்கி கிடந்த பாலித்தீன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் தீவு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், துணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆலோசகர் ஜெரோன் குமார், பசுமை ஆசிரியர் கோபி லெட்சுமி, பாசனியா, பாம்பன் ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினம் appeared first on Dinakaran.

Tags : World Environment Day ,Rameswaram ,Rameswaram Island Community Activists Association ,Theertha Pond ,Rameswaram Island ,Federation of Social Activists ,Dinakaran ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி