×

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் முடிந்த இடங்களில் சாலை போடுவது குறித்தும் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், பிஎஸ்என்எல் அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் அசோக்ராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் மகாதேவன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கார்த்திக், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் பெனிட் நித்வாலா ஜாய், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் முடிந்த தெருக்களில் சாலை போடவும் முடிவு செய்யப்பட்டது. பணிகள் மேற்கொள்ளும் போது பிஎஸ்என்எல் தொலைதொடர்பு கம்பிகள் சேதமாகாமல் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது. சிதம்பரம் பைசல் மகால் அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தினை அகற்றவும், போல்நாராயணன் தெருவில் மின் மாற்றியை இடம் மாற்றி வைக்கவும் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags : Sidharth Sewer ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது