×

ஆட்டையாம்பட்டி அருகே ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் தடுப்பை அகற்றிய விவசாயிகள்

ஆட்டையாம்பட்டி, நவ.8:   ஆட்டையாம்பட்டி அருகே பைரோஜி மற்றும் புதுப்பாளையம் ஏரிக்கு, திருமணிமுத்தாற்றில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர்  திறந்து விடுவதால், எப்போதும் இந்த ஏரி நிரம்பியபடியே காட்சியளிக்கும். இந்த ஏரியை நம்பி புதுபாளையம், பைரோஜி, பிச்சம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில், திருமணிமுத்தாறில் இருந்து பைரோஜி ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில், பாலம்பட்டி அருகே வரும் தண்ணீர் வாய்க்காலில் புதிதாக ₹12லட்சம் மதிப்பீட்டில் மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கடந்த 2மாதங்களுக்கு முன் ஏரிக்கு தண்ணீர் செல்லாதவாறு தடுத்து வைத்துள்ளனர்.

ஏரி வறண்ட நிலையில் உள்ளதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வந்தது. மதகு அமைக்கும் பணி 90சதவீதம் முடிந்தும் மந்த கதியில் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாலம்பட்டி பகுதியில் ஏரிக்கு தண்ணீர் வராதபடி அடைத்து வைத்திருந்த மண் தடுப்புகளை உடைத்து எடுத்தனர். இது குறித்து ஒப்பந்தாரர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபுவுக்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், மண் தடுப்புகள் பொக்லைன் மூலம் முழுவதும் அகற்றப்பட்டது. இதையடுத்து பைரோஜி புதுப்பாளையம் ஏரிக்கு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : water canal ,lake ,Artaiampatti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு