×

வீட்டை காலி செய்ய அவகாசம் உக்கடம் பகுதி மக்கள் மனு

கோவை,நவ.2: வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டு உக்கடம் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். உக்கடம் கருமாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில், உக்கடம், கருமாரியம்மன் கோவில் வீதியில் 250 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்போது உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக நாங்கள் குடியிருக்கும் பகுதியை மாநகராட்சி கையகப்படுத்தியுள்ளது.

இதற்காக 15 கி.மீ தொலைவிற்கு மேல் உளள் மலுமச்சம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதியுடன் வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி அடுத்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு முடியும் வரை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Udakadam ,house ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...