×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், நவ.1: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதன்சந்தையில் நேற்று ஆடுகள் விலை உயர்ந்தது. நாமக்கல்  மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது.  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் தங்களது  ஆடு, கிடாய் மற்றும் ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்ய, சந்தைக்கு ஓட்டி  வருகின்றனர். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி,  பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை ேசர்ந்த வியாபாரிகள்  மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர். தீபாவளிக்கு ஒரு  வாரமே உள்ளதால், இறைச்சி தேவை அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் வந்திருந்தது. அதேபோல், வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹4,800க்கு விற்பனையான 10 கிலோ  எடை கொண்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் ₹5,100க்கு விற்பனையானது. அதுபோல்  ₹3,100க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு ₹3,500க்கும், பிறந்து ஒருமாதமே ஆன  பெண் மற்றும் கிடா குட்டி ₹1000க்கும் விற்பனையானது. மக்களிடையே இறைச்சி தேவை  அதிகரித்ததால் சந்தையில் நேற்று, வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு