×

ஊதிய உயர்வு கோரி சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

நாமக்கல், அக்.31: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று, நாமக்கல் பூங்கா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியராக மாற்ற வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடேசன் தலைமை வகித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை, நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்