×

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி பயிற்சிக்கு செல்லும் படைவீரர் வாரிசுகளுக்கு போதுமான வசதி

கரூர், அக்.30:  ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான பயிற்சி செல்லும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தோருக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான தேர்வு 2, 2018 தேர்வுக்கு இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு சென்னையில் முன்னாள் படைவீரர் நல இயக்ககம், ராஜாமுத்தையா சாலை, சென்னை03 என்ற இடத்தில் முன் பயிற்சி நவம்பர் 7 முதல் 16ம்தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு இப்பயிற்சிக்கு கீழ்கண்ட வசதிகள் வழங்கப்பட உள்ளது.

முன்பயிற்சி நடைபெறும் 10நாளில் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு இயக்ககத்தால் வழங்கப்படும். பயிற்சிக்கு வந்து செல்ல இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். தங்கி பயிற்சிக்கு ஆஜராகவுள்ள சிறார்கள் பெற்றோர்களின் சம்மதக்கடிதத்தினை பெற்றுவர வேண்டும். முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குனரின் அனுமதி சான்றினை பெறும் பொருட்டு, திருச்சி மாவட்ட முன்னாள் படை வீரர் நலஉதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : heir ,security workshop ,
× RELATED ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு...