×

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் விழுப்புரம் எஸ்பி திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, அக். 31: கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உள்ள வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மற்றும் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிஎஸ்பி ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : raid ,Villupuram SPP ,police station ,Kallakurichi ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை