×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உளுந்தூர்பேட்டை,  அக். 31:  உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா  மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு  பேரணி நடத்தினர்.
மாணவர்கள் ராம்ஈஸ்வர், கோபிநாத் ஆகியோர் தலைமையில்  மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் இல்லாத நாட்டை  உருவாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்
களுடன்  கந்தசாமிபுரம் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று வீடு, வீடாக  விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பிணம் பதப்படுத்தும் மையம் கட்ட இடைக்கால தடைவிழுப்புரம், அக். 31: விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் பிணம் பதப்படுத்தும் மையத்திற்கு இடைக்கால தடை விதித்து பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தாசில்தார் ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் கே.கே ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிணங்களை எரியூட்டும் கட்டிடம் உள்ளது. இதனிடையே அதே பகுதியில் தற்போது பிணம் பதப்படுத்தும் மையம் கட்டிட பணிகளை ரோட்டரி சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் 80 சதவீதம் முடிந்த நிலையில் உள்ளது. பணிகள் இறுதிகட்டத்தின்போதுதான் இந்த கட்டிடம் பிணம் பதப்படுத்தும் மையம் என்பது மக்களுக்கு தெரியவந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு காவல்நிலைய போலீசார் பணிகளை தற்லிகமாக நிறுத்தவும், தாசில்தார் தலைமையில் அமைதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அதன்படி நேற்று தாசில்தார்(பொறுப்பு) ஆனந்தன் தலைமையில் அமைதிக்கூட்டம் நடந்தது. பொதுமக்கள் தரப்பில் அப்பகுதி முன்னாள் கவுன்சிலரும், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் ராமு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இருதரப்பு வாதங்களை கேட்ட தாசில்தார், இறுதியாக இந்த பிணம் பதப்படுத்தும் மைய கட்டிடப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் கோட்டாட்சியர், ஆட்சியர் தலைமையிலான கூட்டத்திற்கு பரிந்துரை செய்தும் அதுவரை பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை