×

கீழ்வேளூர் அருகே கோகூரில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எஸ்பியிடம் பெண்கள் மனு

நாகை,அக்.26: கீழ்வேளூர் அருகே காகூரில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று எஸ்பியிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூரை சேர்ந்த தெற்கு பாப்பாக்குடி, வடக்கு பாப்பாக்குடி, புதுத்தெரு, தெற்கு தெரு பகுதிகளை சோந்த மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை மாவட்ட எஸ்பி விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோகூர் கடைத்தெருவில் கள்ளச்சாராயம் சிலர் விற்று வருகிறார்கள். இதனால் அங்கன்வாடி, பள்ளிகூடம், கடைத்தெரு போன்ற பகுதிகளுக்கு பெண்கள் குழந்தைகள் சென்று வர முடியவில்லை. மேலும் ஆண்கள் கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு மனைவிகளை அடித்து உதைப்பதும்,

கெட்ட வார்த்தைகளால் பேசுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் குழதைகள் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கு ஒருவர் விலகி செல்லும் சூழ்நிலை உள்ளது. இது பற்றி நாகை மாவட்ட கலெக்டரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தாங்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து கோகூர் மக்களை கள்ளச்சாரய பிரச்னையில் இருந்து காப்பாற்றிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Women ,SPP ,Kokuvur ,Kolavalur ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...