×

3500 டன் அரிசி முண்டியம்பாக்கம் வந்தது

விக்கிரவாண்டி, அக். 26: தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அரிசி வழங்க மாவட்ட நிர்வாகம் வெளி மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்து பற்றாக்குறை ஏற்படாதவாறு இருப்பு வைத்து, பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்
படுகிறது.
இதுபோல் தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி என்ற இடத்தில் இருந்து 3500 டன் அரிசியை கொள்முதல் செய்து 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதனை பார்வையிட்ட அதிகாரிகள், லாரிகள் மூலம் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தேவைக்கு ஏற்றவாறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை