×

பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து கடும் நெரிசல்


பாலக்கோடு, அக்.25:  பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாலக்கோடு பஸ் ஸ்டாண்டிற்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் துணி கடைகள், மளிகை கடைகள், செல்போன் கடைகள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், சாலையோரங்களில் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும், சாலையோர கடைகளால், அடிக்கடி பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது.
இருப்பினும் கனரக வானங்கள் நகருக்குள்ளே வருவது குறைந்தபாடில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் ேவலைக்கு செல்பவர்கள் தாமதமாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : balcony bus stand ,
× RELATED பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் ஷேர் ஆட்டோ...