×

கலெக்டர் தகவல் கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு உடனே சரி செய்ய வேண்டும்

கரூர், அக்.25:  கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு, கசிவுகளை உடனுக்குடன் சரி செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
 கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டெங்குநோய் பரப்பும் கொசுக்கள், எவ்வாறு அவை பரவுகின்றது, டெங்கு கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று கரூர் நகராட்சி 29வதுவார்டு வஞ்சியம்மன்கோயில் தெரு, மக்கள்பாதை ரெட்டைவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் தடுப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தும்வகையில், ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் குறுவட்ட அளவிலும் வார்டுவாரியாகவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திட் அலுவலர்கள் நியமிக்கப்படடு தடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
 ஆய்வுமேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடிவைத்து தூய்மைப்படுத்துகிறார்களா என ஆய்வு செய்து நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் வருகின்றனர். நீரைமுறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர்தேங்கியிருந்தாலோ அதுபற்றிவிழிப்புணர்வு வழங்கிவருகின்றனர். ஏடிஸ் கொசு அதன்வளர்ச்சி குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது
 பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை து£ய்மையாக பராமரிக்க முன்வரவேண்டும். வீடு கட்டுமானப்பணிகளை மேற்கொள்பவர்கள் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தும் தண்ணீர் 3நாட்களுக்குமேல் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் வீட்டைசுற்றி தேங்காய்சிரட்டைகள், பிளாஸ்டிக்பொருட்கள், டயர், உடைந்தபானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனபெட்டிக்கு பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.
 வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுயவைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில்உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ளவேண்டும் என்றார்.
 மேலும் நகராட்சி குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் மற்றும் கசிவுகளை உடனுக்குடன் சரிசெய்யவேண்டும். மக்கள்பாதை பகுதியில்உள்ள ரெட்டை வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நிர்மல்சன், கரூர்நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர்நலஅலுவலர் ஆனந்தகுமார், தாசில்தார் ஈசுவரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Karur Municipality ,leak ,water tap break ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு