×

புறநோயாளிகள் செல்லும் வழியில் இடையூறாக நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள்

விக்கிரவாண்டி, அக். 23: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு பகுதியில் அதிக பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் செல்லும் வழிபாதையில் ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் நடந்து செல்லும்போது ஒருவழி பாதையில் செல்வதுபோல் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் பல காலி இடங்கள் உள்ளது. அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்காமல் பொதுமக்கள், நோயாளிகள் நடந்து செல்லும் பாதையில் இடையூறாக நிறுத்தி வைத்துள்ளதால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இருசக்கர வாகனங்களை ஒழுங்கு
படுத்தி நிறுத்தவும், ஆம்புலன்ஸ்களை புறநோயாளிகள் வரும் நேரத்திலாவது காலியாக உள்ள இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை