×

தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 11: திருச்சியில் நேற்று தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகரை ஸ்மார்ட் சிட்டி ஆக அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியும் ஒதுக்கியுள்ளது.ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் மாநகரில் கடைவீதி பகுதிகளான என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, நந்தி கோயில், சூப்பர் பஜார் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள தரைக்கடைகளை அப்புறப் படுத்தும் முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தரைக்கடை வியாபாரிகளை அழிக்க நினைக்கும் திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஏஐடியுசி தரைக்கடை,

சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மணி, மாவட்டத் தலைவர் சுரேஷ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் திராவிடமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவா, அண்ணாதுரை, பகுதி செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Floor shoppers demonstration ,
× RELATED துவரங்குறிச்சி-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு