×

மாநில டென்னிஸ் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முதலிடம்

பெரம்பலூர், அக்.11:  மாநில அளவில் நடந்த டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் திருநெல்வேலியிலுள்ள செயின்ட் ஜான் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரிஅணி கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தது.

டென்னிஸ் விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனி வாசன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியின் போது, தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் சாந்தகுமாரி, உதவிப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags : Dhanalakshmi Srinivasan College ,state tennis tournament ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...