×

மதுரை ஏர்போர்ட்டில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை

அவனியாபுரம்:  மதுரை விமான நிலையத்தில், விரிவாக்க பணிகள் குறித்து நிலைய இயக்குநர் கணேசன் நேற்று கூறியதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.110 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும். இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்படவுள்ளது என்றார்.

Tags : Madurai Airport , 24-hour service at Madurai Airport from April 1
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்