கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறுவடை தொடங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதமடைந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் அடுத்த வெங்கட்டாம்பேட்டை, தோப்பூர்,சேம்பங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஏறி பாசன விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டுள்ளனர். நேற்று நெல் அறுவடையை தொடங்கிய 2 மணி நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் அறுவடை செய்த நெல் மணிகள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவழித்த நிலையில் நெல் மணிகள் உதிர்ந்து சேதமடைந்ததை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
