×

வேளாண் பட்ஜெட்... மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம்

மல்லிகை மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இது தொடர் திட்டமாக 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்தொகுப்பிற்குத் தேவையான தரமான மல்லி செடிகளை ராமநாதபுரத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கப்படும். மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* முருங்கைக்கு ரூ.11 கோடி
முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம் அறிவித்தது. முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சாகுபடி முறைகள், மதிப்பு கூட்டுதல் பயிற்சி, சான்றிதழ் பெறும் முறைகள், ஏற்றுமதி நெறிமுறைகள் குறித்த பயிற்சிகள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும். இதற்கொன ரூ.11 கோடி ஒதுக்கப்படும்.

* ஆண்டு முழுவதும் தடையில்லாமல் தக்காளி, வெங்காயம் கிடைக்க ரூ.48 கோடி நிதி
2023-24ம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில், ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில்: ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தல், தடுக்க அமைத்தல், அதிக மகசூல் தரும் ரகங்களைப் பயிரிடுதல். மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், ேதனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.19 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

* சிறுதானிய உணவகம்
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டேர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். இப்பகுதியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மேலும், 1000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுப்பொருட்கள் வழங்குவதோடு, மிளகாய்த்தூள், சூரிய உலர்த்திக் கூடம், தூய்மையான முறையில் காய வைத்து சந்தைப்படுத்திட உலர் பாய் போன்றவை வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஆண்டில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* மவுசு கூடும் பொருளாகும் கறிவேப்பிலை
உலர் கறிவேப்பிலை, கறிவேப்பிலைத்தூள், பேஸ்ட் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும். விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு ஏற்றுமதிக்குரிய தரக் கட்டுப்பாடு உறுதி செய்யப்படும். இத்திட்டம் வரும் ஆண்டு ரூ.2 கோடியே 20 லட்சம் நிதியில் செயல்படுத்தப்படும்.

Tags : Madurai ,Mallikai , Agriculture Budget... A Movement for Madurai Mallikai
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!