கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஒன்றிய அரசை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ சொத்துக்களை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வட்டார தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் விஸ்வலிங்கம், ஏழுமலை, ரமேஷ்கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர தலைவர் பி.கிருஷ்ணன் அனைவரும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டார். எல்ஐசி மற்றும் எஸ்பிஐ சொத்துக்களை அதானிக்கு தாரை வார்க்கும் பாஜ அரசை கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்க துணை போகும் பாஜ அரசை கண்டிக்கிறோம். மோடி-அதானி கூட்டு கொள்ளையை முறியடிப்போம். பொதுத்துறை வங்கிகளை கொள்ளை அடிக்க அனுமதிக்க மாட்டோம். பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்யும் அதானிக்கு துணை போகாதே, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்காதே, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்காதே, எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ சொத்துக்கள் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷகங்களை எழுப்பினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இறுதியில், மாவட்ட செயலாளர் டேவிட் நன்றி கூறினார். மதுராந்தகம்: மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, காஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைக்ககோரி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மதுராந்தகம் அடுத்த படாளம் ஜங்ஷனில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி மாவட்ட தலைவர் வேல்விழி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில், சமையல் காஸ் உருளைக்கு மாலை அணிவித்து பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒப்பாரிவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு வட்டார தலைவர் சத்யசீலன், மாவட்ட செயலாளர் கவுதம், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஜேம்ஸ், பூபாலன், ஞானப்பிரகாசம், அருண், குணாளன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
