கடலூர்: கடலூரில் நாளை வழக்கம் போல் பேருந்துகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். என்.எல்.சி.க்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. முழு அடைப்பு விடுத்த பாமகவுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் ஆட்சியர் கூறினார்.
