×

மக்கள் தொகை பெருக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே இருக்காது : பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை!!

டோக்கியோ : மக்கள் தொகை பெருக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று அந்நாட்டின் பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. அங்கு இளைஞர்களை விட முதியவர்களே அதிகம் உள்ளன. இது அந்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் ஜப்பானுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமே அதிகமாக இருந்துள்ளது.

அதாவது கடந்த ஓர் ஆண்டில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், புதிதாக 8 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. அது மட்டுமின்றி கடந்த 2008ம் ஆண்டு புள்ளி விவரப்படி, 12.8 கோடியாக இருந்த மக்கள் தொகை,12.46 கோடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் ஜப்பானின் சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் அழியும் ஆபத்து இருப்பதாக பிரதமரின் ஆலோசகர் மசகோ மோரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நாடே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 


Tags : Japan , Population, Japan, Prime Minister, Adviser
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!