காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 துணைக்கோட்டங்களில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, காஞ்சி தாலுக்கா காவல் நிலையம், மாகரல், உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர், பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய 12 காவல் நிலையங்களும், காஞ்சிபுரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் 2 அனைத்து மகளிர் காவல்நிலையம் என மொத்தம் 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நிர்வாக காரணங்களால் காவலர் பணியிட மாற்றம் நடைபெறவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் பணியிட மாற்றம் நடைபெற்றது. போலீசார் குழந்தைகளின் கல்வி தடைபடாமல் தொடர இந்த பணியிட மாற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 35, தலைமை காவலர்கள் 28, முதல்நிலை காவலர்கள் 41, கிரேட் 2 காவலர்கள் 64 என மொத்தம் 168 காவல் துறையினர் பணியிடம் மாற்றம் பெற்றனர். காஞ்சிபுரம் கோட்டத்தில் 123 காவல் துறையினரும், ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் 45 காவல்துறையினரும் பணியிட மாற்றம் பெற்றனர்.
