×

‘ஒன்வே’யில் வாகனம் ஓட்டியதாக ரூ.1.53 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி நெரிசல் நேரங்களில் ஒரு வழிப்பாதையில் வாகனம் இயக்கியதாக 68,629 வாகன ஓட்டிகளிடம் ரூ.1.53 கோடி அபராதமாக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். சென்னையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மோட்டார் வாகன சட்டப்படி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில், ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 28 மற்றும் 1ம் ஆகிய தேதிகளில் சிறப்பு வாகன தணிக்கை போக்குவரத்து போலீசார் நடத்தினர்.

அதில், போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரங்களில் சாலை விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டியதாக 5,667 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.15.67 லட்சம் பணம் வசூலித்தனர். மேலும், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 60 நாட்களில் மாநகரம் முழுவதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் ஒரு வழி பாதையில் வாகனம் ஓட்டியதாக 68,629 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதமாக 1 கோடியோ 53 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்துள்ளனர்.

Tags : Oneway , Rs 1.53 crore fine collected for driving on 'Oneway'
× RELATED கலெக்டர் அனீஷ்சேகர் தகவல் ஒன்வே...