×

அமெரிக்காவில் பெய்து வரும் உறைபனியால் ஆர்ட்டிக் துருவம் போல் காட்சியளிக்கும் நியூயார்க் நகரம்

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அலுவல் மிகுந்த நகரங்களில் ஒன்றான நியூயார்க் தான். இங்கு பனி பெய்வது இயல்புதான் என்றாலும் தற்போது வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து உறைபனி கொட்டி வருகிறது.

நியூயார்க்கை ஒட்டிய மிகவும் சிறிய மாகாணங்களில் ஒன்றான மாசசூட் மாகாணத்திலும் உறைபனி பெய்துவருவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் வெளியில் வராமல் முடங்கியுள்ளன. இரு மாகாணங்களிலும் வீதிகள் முழுவதும் குறைந்தது 20 செ.மீ அளவுக்கு அதாவது 8 அங்குலம் உயரத்திற்கு பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. இந்த சீசனில் நியூயார்க் நகரில் பெய்துள்ள அதிக பட்ச பனிப்பொழிவு இதுவாகும்.


Tags : New York City ,America , Freezing, arctic, scenic, New York City
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...