×

3வது ஆண்டாக தொடர்ந்து உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேர்வு..!!

சிங்கப்பூர்: 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சக்திமிக்க பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் விளங்குகிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 55 நாடுகளுக்கு மட்டும் பயணம் செய்ய முடியும். 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஹென்லே பாஸ்போர்ட் பட்டியலின்படி ஜப்பான் மற்றும் தென்கொரிய பாஸ்போர்ட்டுகள் 2ம் இடத்தில் உள்ளன. 3-ம் இடத்தில் உள்ள டென்மார்க், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். அமெரிக்கா ஒரு புள்ளி சரிந்து 10வது இடத்தில் உள்ளது; அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். விசா இன்றி நாடுகளுக்கு பயணம் செய்வதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஹென்லே பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடுகிறது.

Tags : Singapore ,
× RELATED தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும்...