×

வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்?.. ஐகோர்ட் கிளை

மதுரை: மணல் கடத்தல், திருட்டு வழக்கில் வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?  ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய் துறைக்கு உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை தருவைகுளம் அருகே கல் உடைக்கும் மையத்தின் உரிமம் ரத்து, வாகனங்கள் பறிமுதலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விரிவான வாதத்துக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : iCourt Branch , Who will hear the vehicle impoundment case?.. ICourt Branch
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...