×

இறங்கி வந்த தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680க்கு விற்பனை : குஷியில் நகை பிரியர்கள்!!

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 குறைந்தது. அதே நேரத்தில், தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை, கடந்த 2ம் தேதி சவரன் ரூ.44,040க்கு விற்கப்பட்டது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.42,320க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,800-க்கு விற்பனைசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,210க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.41,680க்கும் செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.70க்கும், ஒரு கிலோ ரூ.70,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Sawana ,Kushi , Gold, Price, Sawaran, Sale
× RELATED நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில்...