×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிப்.15 முதல் ஏப்.2ம் தேதி வரை 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெற்றது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று மே 13ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. சிபிஎஸ் இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 16,22,224 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அதில் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 87.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 0.65% அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 91.52%, மாணவர்கள் 85.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.40% மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 99.91 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 99.04 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2-வது இடமும் 98.47 சதவித தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடம் பிடித்துள்ளதுள்ளது. 78.28 சதவீத தேர்ச்சியுடன் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் மண்டலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் சாதனை மற்றும் உங்கள் இடைவிடாத அர்ப்பணிப்புக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

உங்கள் ஆதரவான குடும்பங்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள கல்வியாளர்களின் முயற்சிகளையும் நான் அங்கீகரிக்கிறேன், அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு இந்த வெற்றிக்கு முக்கியமானது. இனி வரும் முயற்சிகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தாங்கள் அதிகம் சாதித்திருக்க முடியும் என்று நம்பும் புத்திசாலித்தனமான மாணவர்களுக்கு-நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் பயணத்தில் ஒரு மைல்கல் மட்டுமே. உங்கள் எதிர்காலம் வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

எது உங்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் தூண்டுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களின் தனித்துவமான திறமைகள் உங்களை வெற்றிக்கும் நிறைவிற்கும் அழைத்துச் செல்லும். தொடர்ந்து முன்னேறுங்கள், தொடருங்கள்” என தெரிவித்துள்ளார்.

The post சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,CBSE ,Delhi ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி