சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்தது. அதே நேரத்தில், தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை, கடந்த 2ம் தேதி சவரன் ரூ.44,040க்கு விற்கப்பட்டது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.42,320க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.5,245க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.41,960க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
