மும்பை: அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்கள், இந்தியப் பொருள்கள் மீதான வரி விதிப்பால் 6வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளில் வர்த்தகமானது.
ரூ.6 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் 4,252 நிறுவனங்களின் பங்குகளில் 3,189 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமானது. 3,189 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து வர்த்தகமாவதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு எற்பட்டுள்ளது. பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு 6 நாட்களில் ரூ.18.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
