×

இதய நோயால் போராடுகிறேன்! பவன் கல்யாணின் மாஜி மனைவி உருக்கம்

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் ஜன சேனா கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான நடிகை ரேணு தேசாய் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரேணு தேசாய் வெளியிட்ட சமூக வலைதளபதிவில், ‘இதயம் மற்றும் வேறு உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்களுக்கு எனது பிரச்னை தெரியும்.

இப்போது நான் இதனை தெரிக்க காரணம், என்னை போன்று உடல் நலப் பிரச்னைகளில் சிக்கி போராடும் பலரையும் நினைவுபடுத்துவதற்காகவே கூறுகிறேன். எந்த நேரத்திலும் நாம் மிகவும் வலுவானவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் மீதும் நம்பிக்கையை இழக்க கூடாது. இந்த பிரபஞ்சம் நமக்காக அழகான திட்டங்களை வகுத்து வைத்துள்ளது. வாழ்க்கையை சிரித்து மகிழுங்கள். உடல் நலச் சிகிச்சைகள், யோகா, ஊட்டச்சத்து போன்றவை நம்மை வலுப்படுத்தும். விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pawan Kalyan ,Urukam , Fighting heart disease! Pawan Kalyan's ex-wife Urukam
× RELATED ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள...