×

ஆஞ்ச நேயர் சிலைக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்: ரயில்வே நில ஆக்கரமிப்பை அகற்ற 7 நாள் கெடு விதிப்பு

போபால்: மத்தியபிரதேசத்தில் ரயில்வே நிலத்தை அக்கரமித்து ஆஞ்சநேயர் சிலை காட்டியதற்காக நோட்டீஸ் கொடுத்த விவகாரம் சர்ச்சை ஆகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மோரோனா மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சபால்கர் நகரில் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஆக்கரமித்து ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுளள்து. கோவில் உள்ள ஆஞ்சநேயர் சிலையை பஜ்ரங் பலி பிரபு அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

ரயில்வே நிலத்தை ஆக்கரமித்து கட்டப்பட்ட கோவிலை அகற்ற ரயில்வே நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்க்காக பஜ்ரங் பலி பிரபுக்கு அதாவது ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளனர். அதில் 7 நாட்களுக்குள் ஆக்கரமித்து அகற்ற வேண்டும் அதற்கு தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங் பலி தமது ஆக்கரமிப்பை அகற்ற தவறினால் ரயில்வே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அதற்கான சிலவை பஜ்ரங் பலி ஏற்று கொள்ள வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

பிப்ரவரி 8ம் தேதியிடப்பட ரயில்வே நோட்டீஸ் கோவிலின் கதவில் ஒட்டப்பட்டது. ஆஞ்சநேயர் சிலைக்கு ரயில்வே சார்பில் நோட்டீஸ் கொடுத்த விவகாரம் வலைத்தளங்களில் அதிகம் பகிரபட்டுள்ளது. அந்த விவகாரம் சர்ச்சையானதால் ரயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்தனர். மனிதர்களுக்கு பதில் சிலைக்கு நோட்டீஸ் கொடுத்ததை அறிந்த அதிகாரிகள் தங்கள் தவறை சரி செய்ய முன்வந்தனர், இது குறித்து ஜான்சி ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் மாத்தூர் கூறும் போது நோட்டீஸ் தவறுதலாக வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் தவறுதலாக நோட்டீஸ் அனுப்பிவிட்டோம் கோவில் பூசாரிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் சிலைக்கு ஜான்சி ரயில்வே கோட்டத்தின் முதப்பிரிவு பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து கோவிலின் பூசாரி ஹரி சர்மா பெயரில் புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சியோப்பூரில் புதிய ரயில் பாதை அமைப்பதற்காக கோவிலை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நடவடிக்கை எடுத்த ரயில்வே அதிகாரிகள் சிலைக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே நோட்டீஸ் வழங்கிய விவகாரம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.   


Tags : Anja Nair , Officials issue notice to Anja Nair statue: 7-day notice to remove railway land encroachment
× RELATED தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்...