வாஷிங்டன்: உக்ரைன், ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அளித்துள்ள பேட்டியில், “ரஷ்யா-உக்ரைன் போருக்கு புடின் தான் காரணம். போரை நிறுத்த அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் அவர் அதை செய்யாமல் தொடர்ந்து போரிட்டு வருகிறார். இருநாடுகளிடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்வர வேண்டும். போரை நிறுத்த புடின் முன்வராததால் நாங்கள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்கிறோம். இந்திய பிரதமர் மோடியால் புடினை சமாதானம் செய்ய முடியும். புடினுடன் பேசும்படி மோடியை நாங்கள் வலியுறுத்துவோம். உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த பிரதமர் மோடி எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா நிச்சயம் வரவேற்கும் என்றார்.
