சென்னை: கல்குவாரியில் நீரில் மூழ்கி காணாமல் போன வெங்கடேசன் (34) என்பவரை மீட்க தேசிய மீட்பு குழு மாங்காடு விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாங்காடு விரைந்துள்ளனர். சென்னை அடுத்த மாங்காட்டில் உள்ள கல்குவாரியில் மூழ்கி வெங்கடேசன் காணாமல் போனார்.
