×

தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை!

 

நெல்லை: நெல்லை, தென்காசியில் பெய்த தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக, மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர். இந்நிலையில், மணிமுத்தாறு அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில், இரண்டாவது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Tags : Manimuthar ,waterfall ,Nellai ,Tenkasi ,Meteorological Department ,Tamil Nadu ,Gulf of Mannar ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...