×

சாதி அடையாளம் எனக்கு வேண்டாம்: சம்யுக்தா

சென்னை: மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளவர், சம்யுக்தா மேனன். தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இதில் சமுத்திரக்கனி, தணிகலபரணி, சாய்குமார் நடித்துள்ளனர். இப்படம் குறித்து சம்யுக்தா கூறியதாவது: 1990 முதல் 2000 வரை கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இப்படம் பேசுகிறது. கல்வி வியாபாரமாகி விட்டதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் சொல்லப்படுகிறது. கல்வியில் மாற்றத்தை கொண்டு வர போராடும் ஆசிரியர், ஆசிரியை பற்றிய கதை இது. ஆசிரியராக தனுஷ், ஆசிரியையாக நான் நடித்துள்ளோம். இந்தப் படம் கல்வி அமைப்பு பற்றியது. ஒருவர் விரும்புவதைப் படிப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். விரும்பாத படிப்பை  திணிக்கவே கூடாது. நான் பிளஸ் 2 வரை படித்தேன்.

பிறகு நடிக்க வந்துவிட்டேன்.  டிகிரி இருந்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதில்லை. பணிக்கான படிப்பு,  பணத்துக்கான படிப்பு என்றில்லாமல், நமக்குப் பிடித்ததைப் படிக்க வேண்டும்.  விரும்பியபடி வாழ வேண்டும். நான் பாலக்காடு பெண் என்பதால் தமிழில் பேசு வேன். இப்போது தெலுங்கு கற்றுக்கொண்டேன். நேரம் இல்லாததால் ‘வாத்தி’ படத்துக்கு டப்பிங் பேசவில்லை. தமிழ்தான் எனக்கு மிகவும் பிடித்த மொழி. தமிழ் இலக்கணங்களை கற்றுக்கொள்ளவும் ஆசை. தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம், சரியான வாய்ப்பு அமையாததுதான். ‘வாத்தி’ பட டைட்டில் உள்பட எதிலும் எனது பெயருக்குப் பின்னால் இருக் கும் ‘மேனன்’ என்ற சாதி அடையாளத்தை நீக்கச் சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. சாதியிலும் உடன்பாடில்லை. மீடியாக்களும் என்னை, சம்யுக்தா என்று மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.


Tags : Samyukta , I don't want caste identity: Samyukta
× RELATED பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில்...