×

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி

சென்னை: நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவர் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிசியாகிவிட்டார். இதனால் நலன் குமாரசாமி, சூர்யா இணையும் படம் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் படம் இயக்கும்படி நலனுக்கு சூர்யா அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார்.

இந்த படம் முடிந்ததும் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளாராம். சூர்யாவுக்காக நலன் குமாரசாமி எழுதி வைத்திருந்த கதையில்தான் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகிறது. செப்டம்பரில் ஜப்பான் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. நலனுடன் கார்த்தி இணையும் படம் அடுத்த ஆண்டே வெளியாகும் என தெரிகிறது.

Tags : Karthi ,Nalan Kumaraswamy , Karthi directed by Nalan Kumaraswamy
× RELATED கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் பர்ஸ்ட் லுக் வெளியீடு