×

பிகானேர் நில மோசடி வழக்கு; ராபர்ட் வத்ரா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு: கைது செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் தடை

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் கடந்த 2012ம் ஆண்டு அரசு நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, அவரது தாய் மவுரீன் வத்ரா மீது  அமலாக்கத் துறை வழக்குப்பதிந்தது. இதனை ரத்து செய்யக் கோரி  ராபர்ட் வத்ரா, மவுரீன் வத்ரா ஆகியோர் ஜோத்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,’ பணமோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரிக்க விரும்பினால் நேரில் ஆஜராக தயார். அதற்காக எங்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். பதி வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது. ஆனால் உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வில் அப்பீல் செய்ய வசதியாக 4 வாரங்களுக்கு  ராபர்ட் வத்ராவையும், அவரது தாயாரையும் அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Robert Vatra , Bikaner land scam case; Refusal to quash case against Robert Vatra: Court restrains enforcement from arresting
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு