×

சட்டமன்றம் முதல் நாடாளுமன்றம் வரை மோடியின் ‘ரூட்டை’ பிடித்த எம்எல்ஏ: குஜராத் பாஜகவில் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத் பாஜக எம்எல்ஏ சஞ்சய் கோர்டியா, நேற்று எம்எல்ஏவாக பதவியேற்கும் முன் சட்டமன்ற வளாகத்தை விழுந்து கும்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வென்று மீண்டும் 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக பாஜக சார்பில் ஜுனாகத் தொகுதியில் இருந்து முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ சஞ்சய் கோர்டியா, தான் பதவியேற்பதற்கு முன்னதாக, சட்டமன்ற நுழைவு வாயிலில் விழுந்து தலைவணங்கி கும்பிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘கோயிலுக்குச் செல்லும் போது, அந்த கோயிலை வணங்குவது போன்று, சட்டமன்றத்தையும் தலைவணங்கி கும்பிட்டேன். சட்டமன்றத்தை கோயிலாக கருதுகிறேன்’ என்றார்.

இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் முன்னாள் முதல்வராக இருந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி, முதன் முதலாக நாடாளுமன்றத்திற்கு வரும் போது, அவர் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலை தலைவணங்கி கும்பிட்டார். அவரை போன்றே எம்எல்ஏ சஞ்சய் கோர்டியா நடந்து கொண்டுள்ளதாக குஜராத் பாஜகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Tags : Modi's' ,Assembly ,Parliament ,MLA ,Gujarat Bajaka , The MLA who followed Modi's 'root' from the Assembly to the Parliament: There is a stir in the Gujarat BJP
× RELATED மோடியின் கால்களில் நிதிஷ் விழுந்தது...