அதிமுகவை வட்டார கட்சியாக மாற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி: திருப்பூரில் டிடிவி. தினகரன் பேட்டி

திருப்பூர்: எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவை வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என திருப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், திருப்பூரில் நேற்று அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் ஒரு பிரிவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு பிரிவாகவும் இருக்கிறார்கள். அதிமுக என்பது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும் வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்தில் சமுதாய கட்சியாகவும் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. எம்ஜிஆர் எதற்காக கட்சி ஆரம்பித்தாரோ? ஜெயலலிதா அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தாரோ? அதை எல்லாம் தற்போது மாற்றிவிட்டனர். ஒரு கடல் போன்ற இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: