×

25 நாட்களுக்கு பின் கோடியக்கரை வன விலங்கு சரணாலயம் மீண்டும் திறப்பு

வேதாரண்யம்: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 25 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பசுமைமாறா காட்டில் மான், குதிரை, நரி, குரங்கு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதன் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் உள்ளது.

இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் பெய்த பலத்த மழையால் சேறும் சகதியுமாக மாறிய வனவிலங்கு சரணாலயம் கடந்த மாதம் 26ம் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சரணாலய வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன் சரணாலயம் திறக்கப்பட்டது. 25 நாட்கள் மூடி கிடந்த சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து வெளிநாட்டு பறவைகள், புள்ளி மான்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags : Kodiakarai Wildlife Sanctuary , Kodiakarai Wildlife Sanctuary reopens after 25 days
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...